கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது மார்ச் 3 மற்றும் 4 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான மார்ச் 3 ஆம் திகதி இரவு உணவு, மார்ச் 4 ஆம் திகதி காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT