உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 10ஆம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் தங்களின் அதிபர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் எனவும் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பமுடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT