ஹார்மூஸ் ஜலசந்தி நெருக்கடி: கப்பல் பாதுகாப்புக்கு ஜப்பான்–ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு முயற்சி

ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கம் உலக வர்த்தகத்தை பாதித்துள்ள நிலையில், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையீடு அறிவிப்பு. பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக உறுதி.

ஹார்மூஸ் ஜலசந்தி நெருக்கடி: கப்பல் பாதுகாப்புக்கு ஜப்பான்–ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு முயற்சி
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் மோதல்கள் உலகளாவிய அளவில் புதிய அச்சங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களின் பின்னர், அந்த நாட்டில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த தாக்குதல்கள் பொதுமக்கள் உட்பட பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது பதிலடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதோடு, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல்வழியான ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது.

இதனால், பல நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் முக்கிய சரக்குகள் சென்றடைவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜலசந்திக்கு வெளியே நூற்றுக்கணக்கான கப்பல்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையை சமாளிக்க, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த நாடுகள் உறுதி அளித்துள்ளன. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT