தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  தெரிய வருகிறது.

தமிழகத்தில் இருந்து படகில் நாடு திரும்பிய நால்வர் பொலிஸ் நிலையத்தில் சரண்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் ஆகிய நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இவ்வாறு  வந்தவர்கள், தாமாக பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு  சென்று விவரத்தைத் தெரிவித்த நிலையில், நால்வரையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  தெரிய வருகிறது.

இலங்கையில் தற்போது போர் முடிவுற்று இயல்பு வாழ்வு திரும்பியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (14)  இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT