வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்!

கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தான் அமெரிக்காவால் "கடத்தப்பட்டதாக" மதுரோ நீதிபதியிடம் தெரிவித்தார்.

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் இன்று (26) நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள மதுரோவின் இல்லத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் மதுரோவும் அவரது மனைவியும் பிடிபட்டனர். அன்றிலிருந்து அவர்கள் அமெரிக்கக் காவலில் நியூயார்க்கில் வைக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

1999ஆம் ஆண்டு முதல் இவர்கள் போதைப்பொருள்  கடத்தல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மதுரோவும் அவரது மனைவியும் மறுத்து, தாங்கள் "குற்றமற்றவர்கள்" என்று வாதிடுகின்றனர். 

கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தான் அமெரிக்காவால் "கடத்தப்பட்டதாக" மதுரோ நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும், தனது வழக்கறிஞர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான நிதியை அமெரிக்கா முடக்கியுள்ளதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மதுரோ அமெரிக்காவால் பிடிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெனிசுலாவின் துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் மதுரோவுக்கு விசுவாசமானவர் என்றாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

ரோட்ரிக்ஸின் தலைமையின்கீழ், வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது போன்ற கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே மதுரோவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் திரண்டுள்ளனர். மதுரோ வெனிசுலாவை முன்னேற்றியதாக ஆதரவாளர்கள் வாதிடும் வேளையில், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும், ஜனநாயக ஆதரவாளர் மரியா கொரினா மச்சாடோ போன்றவர்களே வெனிசுலாவிற்குத் தேவை என்றும் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

2013ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஒடுக்குமுறை காரணமாக சுமார் 80 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT