வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு!

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நிட்டம்புவ - தங்கொல்லவத்த பகுதியில், 70 வயது வயோதிபர் ஒருவர் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார் என நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிபருக்கும் அவரது மருமகனுக்கும் (மகளின் கணவர்) இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபர், வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயது சந்தேகநபரான மருமகனைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT