அஸ்வெசும பயனாளர் பட்டியல் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடைய நபர்களின் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுகிறது. 
அஸ்வெசும பயனாளர் பட்டியல் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக் கருத்தில்கொண்டு, அஸ்வெசும நலன்புரிச் சலுகைகள் திட்டத்தின் பயனாளர் பட்டியலை புதுப்பிப்பிற்கான கால அவகாசத்தை நீடிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. 

அதன்படி, இக்கால அவகாசத்தை இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

முன்னதாக பயனாளர் பட்டியல் புதுப்பிப்பிற்கான காலம் அவகாசம், இம்மாதம் 10ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது. 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரிப் பலன்களைப் பெறத் தகுதியுடைய நபர்களின் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுகிறது. 

2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவு செய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2024ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கெனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, ​​குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QR தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டு இலக்கம் 24 இன் நலன்புரிப் பலன்கள் சட்டத்தின் பிரிவு 23 இற்கமைய, நலன்புரிப் பலன்களுக்குத் தகுதியுடைய மற்றும் தகுதியற்ற குடும்பங்கள் மற்றும் நபர்களின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டது. 

அஸ்வெசுமவின் முதல் கட்டத்தின் கீழ் தற்போது பலன்களைப் பெறுவோர் மற்றும் பலன்களைப் பெறாத அனைத்துக் குடும்பங்கள் மற்றும் நபர்களும் சட்டத்தின் பிரகாரம் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக நலன்புரிப் நன்மைகள் சபையால் டிசம்பர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. 

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர