நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை

இதேவேளை, சூரியன் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில்  50 மில்லிமீற்றருக்கும்அதிக மழை பெய்யலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40-50 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சூரியன் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும்.

இன்று மதியம் 12:10 மணியளவில் வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சத்தில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT