வீடு வாங்கினால் மனைவி இலவசம்... வெளியான விளம்பரத்தால் பரபரப்பு

சீனாவின் டிபிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது.

வீடு வாங்கினால் மனைவி இலவசம்... வெளியான விளம்பரத்தால் பரபரப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

சீனாவின் டிபிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது.

இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. 

அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT