டெல்லியில் சர்வதேச சைபர் மோசடிக் கும்பல் முறியடிப்பு: 164 வெளிநாட்டவர்கள் மீட்பு

இந்தியாவின் புதுடெல்லியில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணையவழி மோசடிகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படும் 164 வெளிநாட்டவர்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். சர்வதேச மனிதக் கடத்தல் மற்றும் சைபர் மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் சர்வதேச சைபர் மோசடிக் கும்பல் முறியடிப்பு: 164 வெளிநாட்டவர்கள் மீட்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவின் புதுடெல்லியில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு இணையவழி மோசடிகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படும் 164 வெளிநாட்டவர்களை டெல்லி பொலிஸார் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனிதக் கடத்தல், சட்டவிரோதமாக நபர்களைத் தடுத்து வைத்தல் மற்றும் வெளிநாட்டவர்களை இணையவழி மோசடிகளில் ஈடுபட நிர்ப்பந்தித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பாரிய சர்வதேச சைபர் மோசடி வலையமைப்பொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியில் குறித்த மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வளாகங்களிலிருந்து 92 இந்தோனேசியப் பிரஜைகளும் 72 மலேசியப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி குறித்த வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவுக்கு வருகை தந்த சிறிது காலத்திலேயே அவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, இணையவழி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சர்வதேச குற்ற வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், குற்ற வலையமைப்பின் முழுமையான செயற்பாடுகள், அதனுடன் தொடர்புடைய நபர்களின் பங்களிப்பு மற்றும் மோசடி நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பணம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT