மேல்மாகாண ஆசிரியர்களுக்கு டியுசன் தடை விதித்து சுற்றறிக்கை


மேல்மாகாண ஆசிரியர்களுக்கு டியுசன் தடை விதித்து சுற்றறிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல் மாகாணத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள், தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தும் வகையில், மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது

அதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார் வகுப்புகளுக்கு கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிந்த பிறகு அல்லது வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வெளி இடங்களில் பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதனை மீறும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT