முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும் பேக்கரித் தொழிலுக்குத் தேவையான முட்டைகளை வழங்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு,  2024-03-18 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பு மூலம் 37 ரூபாய் என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனையடுத்து, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் 2024-04-30 அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT