நெதன்யாகு அழைப்பு: “அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான ஈரானை உருவாக்குங்கள்”

“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்” என அவர் கூறினார்.

நெதன்யாகு அழைப்பு: “அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமான ஈரானை உருவாக்குங்கள்”
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய மக்களை நோக்கி உரையாற்றி, “அடக்குமுறையின் சங்கிலியை கழற்றி, சுதந்திரமும் அமைதியும் நிறைந்த ஈரானை உருவாக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்த நெதன்யாகு, “மனிதகுலம் முழுவதையும் அச்சுறுத்தக்கூடிய அணு ஆயுதங்களை ஈரான் வைத்திருக்கக் கூடாது” என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்” என அவர் கூறினார்.

மேலும், தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு, இஸ்ரேலிய குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT