ஐயப்ப பக்தர்களுக்கான விசாக்களும், கால எல்லையையும் அதிகரிக்கிறது!

ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கான விசாக்களும், கால எல்லையையும் அதிகரிக்கிறது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் நேற்று (05) நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது. எனவே, விசாக்களையும், கால எல்லையையும் அதிகரித்து தருமாறு, ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, இலங்கைக்கான இந்தியத் தூதவர் கோபால் பாக்லேவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் பேச்சு நடத்தினார்.

இதன்பலனாக நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், செல்லுபடியாகும் கால எல்லையை 2 மாதங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT