வைத்தியசாலை மீது தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வைத்தியசாலை மீது தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், காசாவில் உள்ள அல் அரபு வைத்தியசாலை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில்  500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு  500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட வைத்தியசாலை குழந்தைகள் நிறைந்த  வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமன்றி, தாக்குதலுக்கு பயந்து வைத்தியசாலையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வைத்தியசாலை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாலத்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது எக்ஸ் தள பக்கத்தில், காஸாவிலுள்ள அல் அஹ்லி அரபு வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன்.

இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் பேசி, என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசியப் பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டேன்.’ என தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT