ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி

இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, மத்திய கிழக்கு நாடான ஈரான் மீது நேற்று கடுமையான வான் தாக்குதலை மேற்கொண்டன. போர் ஜெட் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் நகரின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT