ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள் – இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடும் அமெரிக்கா!

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள் – இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடும் அமெரிக்கா!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரான் மீது இதுவரை விதிக்கப்பட்ட தடைகளில் மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய தடைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரானின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய தடைகள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரங்கள் மற்றும் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனினும், அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் தொடர்பான அறிவிப்பை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான பொருளாதார மற்றும் அரசியல் அழுத்த நடவடிக்கைகள் மூலம் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தலைவர்கள் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அதே அணுகுமுறைகளையும் திட்டங்களையும் மீண்டும் முன்னெடுத்து வருவது அவர்களது விரக்தியை வெளிப்படுத்துவதாகவும் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதி, பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டுவதற்காக அமெரிக்கா ஈரானுடன் நேர்மையான கலந்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தடைகள் நடைமுறைக்கு வந்தால், ஈரானின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்கனவே பதற்றத்தில் உள்ள அமெரிக்கா–ஈரான் உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர