முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.

களனி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், குறித்த விவகாரத்தில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர், இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -