வடக்கு - கிழக்கு தமிழ் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமாக இருந்தால் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

வடக்கு - கிழக்கு தமிழ் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12) கொண்டாடப்படுவதால், எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னைய வருடங்களில், விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமாக இருந்தால் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், இந்த வருடம் வடக்கு - கிழக்கு பாடசாலைகள் தொடர்பில் இந்த  விடயத்தில் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் எனவும்  வடமாகாண  தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

எனவே, இதனை கருத்திற் கொண்டு  வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை  முன்வைக்கப்பட்டுள்ளது.  

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

இதேவேளை,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT