அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அனுமதி

அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று தரத்திற்கு கீழ் உள்ள அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அந்த ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம், 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருந்தது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT