எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம்

இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில், 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதுவரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, ராஜகிரியவில் இதுவரை விதிகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT