இரண்டு நாட்களுக்காக நியமிக்கப்பட்ட 5 பதில் அமைச்சர்கள் 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்காக நியமிக்கப்பட்ட 5 பதில் அமைச்சர்கள் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர் நாட்டுக்கு திரும்பும் வரையிலும் ஜனாதிபதியிடம் இருக்கும் அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கையின் பதில் அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.திலும் அமுனுகம முதலீடுகள் ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும்  சமூக வலுவூட்டலுக்கான இராஜாங்க  அமைச்சர் அனுபா பாஸ்குவல்,   பெண்கள், சிறுவர்கள் விவகாரம் மற்றும் சமூக அதிகார பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -