இளம் குடும்பஸ்தர் மன்னாரில் வெட்டிக் கொலை

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளம் குடும்பஸ்தர் மன்னாரில் வெட்டிக் கொலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 25 வயதுடைய இளைஞனின் 23 வயதுடைய சகோதரர் ஒருவர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்றைய தினம் காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைளுனை குறித்த யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான குறித்த இளைஞன் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன் போது குறித்த யுவதியின் உறவினர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது.

இதன் போது குறித்த இளம் குடும்பஸ்தரான குறித்த சகோதரர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT