இளைஞன் கொலை தொடர்பில் மூவர் கைது 

கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞன் கொலை தொடர்பில் மூவர் கைது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண  நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,  மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொதடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரிய பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடுவலை பகுதியில் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT