முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை தொடங்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு

விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை தொடங்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் அன்றைய தினம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT