இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது – சொன்னது யார் தெரியுமா?

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (10) மோதவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது – சொன்னது யார் தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (10) மோதவுள்ள நிலையில் இப்போட்டி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர்களில் ஒருவரான மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் நவம்பர் 2021ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியினை பயிற்றுவித்திருந்த மிக்கி ஆத்தர், இப்போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த ஒன்று என்றும், இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் திட்டங்களை சரியாக செயற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

“இலங்கை பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் எனக்கு அவர்களது பலம், பலவீனங்கள் தெரியும். எனவே நாம் அவர்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும். அவர்கள் ஆபத்தான கிரிக்கெட் அணியாக காணப்படுகின்றனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT