நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும்  காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று வேகம் 40-50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

மின்னலுடன் கூடிய மழையுடன் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்கின்றது வளிமண்டலவியல் திணைக்களம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
Click for more latest வானிலை & சூழல் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -