ஜனாதிபதியுடனான மலையக அரசியல் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு!

குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான மலையக அரசியல் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10 ஆம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த காரணங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஏனைய மலைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்த  பின்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -