ஊடகவியலாளர்களுக்கு “உபகார” - ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு

உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு “உபகார” - ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இதன் பயனை அனைவருக்கும் வழங்குமாறும், அந்த சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி,மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT