சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ஜேர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 13 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், டிசெம்பர் முதலாம் திகதி முதல் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒரு இலட்சத்து 750 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்து 597 சுற்றுலாப் பயணிகளும்,  ரஷ்யாவிலிருந்து 14 ஆயிரத்து 156 சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10 ஆயிரத்து 281 சுற்றுலாப் பயணிகளும் வருகை  தந்துள்ளனர். 

மேலும், ஜேர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலவாணி வீதம் தற்போது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -