புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறையில் 30% புள்ளிகளைப் பெற வேண்டும், அதற்காக பிள்ளைகள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை சிக்கலானது என்றும் பிள்ளைகளின் மனதில் பெரும் சுமையாக இருப்பதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், அடுத்த வருடம் கல்வித் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT