ஆற்றில் மூழ்கி காணாமல் போன கார்; 6 மாத குழந்தை உட்பட குடும்பமே பலி!

6 மாதத்திற்கும் 9 வயதுக்கும் இடைப்பட்ட 4 பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அடங்கிய குடும்பத்தினரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

ஆற்றில் மூழ்கி காணாமல் போன கார்; 6 மாத குழந்தை உட்பட குடும்பமே பலி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மலேசியாவில் காணமல்போனதாக நம்பப்பட்ட 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

6 மாதத்திற்கும் 9 வயதுக்கும் இடைப்பட்ட 4 பிள்ளைகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் அடங்கிய குடும்பத்தினரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவர்களை ஜூலை 5ஆம் திகதி முதல் காணவில்லை என்று கூறப்பட்டது.

தமான் அமான் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அவர்கள் வீடு திரும்பில்லை என அவர்களின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். 

அவர்கள் காணமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளமையை மலேசிய பொலிஸாரும் உறுதிப்படுத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், கெடா மாநிலத்தில் உள்ள சுங்காய் கொரோக் ஆற்றில் விழுந்த காரிலிருந்து அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 

குறித்த குடும்பத்தினரின் சடலங்களை மீட்க பெரிதும் சிரமப்பட்டதாகத் தீயணைப்புப் படை தெரிவித்தது.

காரின் மேல் பகுதியை வெட்டி எடுத்த பின்பே சடலங்களை வெளியேற்ற முடிந்ததாகவும் தீயணைப்புப் படை தெரிவித்தது.

இந்தத் சம்பவம் குறித்த விசாரணைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT