விலைவாசி உயர்வுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாவில் விலைவாசிக்கு எதிராக பொருட்களை சுமந்தபடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விலைவாசி உயர்வுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று வாழ்க்கைச்சுமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் அரசாங்கத்ததை விரட்டியடிக்கும் நடவடிக்கையாகவும் இட்போராட்டம் இடம்பெற்றது .

ADVERTISEMENT
ADVERTISEMENT

மண்ணெண்ணை , பெற்றோல் , சமையல் விரிவாயு , பானைகள் , மின்சார உபகரணங்கள்  போன்ற சமையலறை உபகரணங்களை சுமந்து வந்து இப் போராட்டத்தை மேற்கொண்டனர். 

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு பொருளாதாரச்சுமைகளைத் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர் .

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர் .

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT