இலங்கை, தாய்லாந்தை அடுத்து இலவச விசா வழங்கும் நாடு

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான முன்மொழிவை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை, தாய்லாந்தை அடுத்து இலவச விசா வழங்கும் நாடு

இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு விசா இல்லாத நுழைவினை வழங்க வியட்நாம், தீர்மானித்துள்ளது.

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான முன்மொழிவை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா மற்றும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 20 நாடுகளுக்கும் இலவச சுற்றுலா விசாவை வழங்கும் முன்மொழிவை பிரதமர் பாம்மின் சின் முன்வைத்துள்ளார்.

இதேவேளை, ஜேர்மன், பிரான்ஸ், சுவீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வியட்நாமுக்கு இப்போது செல்லலாம் என்பதுடன், ஏனைய நாடுகளுக்கு 90 நாள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய பிரஜைகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்கும் இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் தற்போது வியட்நாம் இணைந்துள்ளது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர