லாஃப்ஸ்  மற்றும் லிட்ரோ விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ்  மற்றும் லிட்ரோ விலைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலைமை குறித்து லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்துக்குள் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் லாஃப்ஸ் காஸ் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான தற்போதைய வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். (News21)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT