சாதாரணத்தர பெறுபேறு வெளியீட்டு திகதி குறித்து புதியஅறிவிப்பு வெளியானது

சாதாரணத்தர பரீட்சையில் சித்திப்பெறும் மாணவர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணத்தர பெறுபேறு வெளியீட்டு திகதி குறித்து புதியஅறிவிப்பு வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விடைத்தாள்கள் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறது என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சாதாரணத்தர பரீட்சையில் சித்திப்பெறும் மாணவர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே  பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT