இந்திய மீனவர்கள் கைது - கடற்படை வீரர் உயிரிழப்பு

குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது  கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்திய மீனவர்கள் கைது - கடற்படை வீரர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய மீனவர்கள் குழுவை கைது செய்ய சென்ற போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இழுவை படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது  கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் அதிகாலை சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

இந்தியப் கடற்றொழிலாளர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போது குறித்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது, கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரும், கடற்றொழிலாளர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT