இலங்கை கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மன்னார் உருமலை முனைக்கு அப்பால் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.