பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் 19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் 19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணுறையில், ஒரு வரைபடம் அச்சிடப்பட்டுள்ளதுடன், அந்த காட்சிக்கு கீழ் "வோய்லா மோன் சோயிக்ஸ்” (இது என்னுடைய விருப்பம் என்று பொருள்படும்) பிரெஞ்சு மொழியில் ஒரு தலைப்பும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆறு மாதங்களுக்கு முன்பு ஹார்லெமில் நடந்த ஏலத்தில் ரிஜ்க்ஸ்மியூசியம், இந்த ஆணுறையை €1,000 (சுமார் ₹98,000)-க்கு வாங்கி இருக்கிறது.

இது போன்ற ஆணுறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு செழிப்பான வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதாக ரிஜ்க்ஸ் மியூசியத்தின் அச்சு பொருள்களின் கண்காணிப்பாளரான ஜாய்ஸ் ஜெலன் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், அந்த நேரத்தில் ஆணுறைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுக்கும், சிபிலிஸுக்கு போன்ற சுகாதார அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணுறையானது, பாலியல் மற்றும் நோய் பற்றிய 19 ஆம் நூற்றாண்டின் கண்ணோட்டங்களை எடுத்துரைப்பதுடன், இது நவம்பர் இறுதி வரை ரிஜ்க்ஸ்மியூசியத்தின் அச்சு அறையில் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT