அமெரிக்காவில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: டிரம்ப் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கல்

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: டிரம்ப் அரசாங்கத்துக்குப் பெரும் சிக்கல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, நேற்று ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நெருக்கடிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் நிதி சிக்கலே முக்கிய காரணமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாமல் அனைத்து துறைகளும் முடங்கிப் போயின. குறிப்பாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதன் விளைவாக, அத்தியாவசியத் துறையில் பணிபுரியும் 7 லட்சம் பேர் சுமார் ஒரு மாதமாகச் சம்பளம் இன்றி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். மேலும், 6.5 லட்சம் பேர் கட்டாய விடுப்பில் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக, அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிதி விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலும், ஊழியர்கள் பற்றாக்குறையும் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட இந்த எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் மேலும் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகப் போக்குவரத்துத் துறை மந்திரி சீன் டபி (Sean W.) தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT