பாரிய மரக்குற்றி விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தலவாக்கலையில் சோகம்

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாரிய மரக்குற்றி விழுந்து ஒருவர் உயிரிழப்பு - தலவாக்கலையில் சோகம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று (14) மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவரின் நெஞ்சு பகுதியில் மரக்குற்றியொன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டப்படுகின்றது.

அதில் குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் ஸ்கல்பா தோட்டத்தில் பள்ளத்தாக்கு பகுதியொன்றில் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்றாக கீழே கிடந்துள்ளன.

அதிலொரு மரத்தின் மேலே நின்று அதனை குற்றிகளாக வெட்டிக்கொண்டிருந்தபோது அதிலொரு மரக்குற்றி, வழுக்கி கொண்டு வந்து குறித்த நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT