பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட கணவரை தாக்கிய கும்பல்.!

பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட கணவரை தாக்கிய கும்பல்.!

உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.

மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில், மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. தாக்குதல் எப்போது நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.