நாடு முழுவதும் நகர்ந்து வருவம் காற்றழுத்த தாழ்வு நிலை 

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நகர்ந்து வருவம் காற்றழுத்த தாழ்வு நிலை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மணிக்கு 40.50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT