தனது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

G-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு (16) இலங்கை வந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி இவ்வாறு பிறந்த நாளை கொண்டாடியதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போதே, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில், தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT