விபத்தில் சிக்கிய மகளுக்கு தெரியாமலே சிகிச்சையளித்த தாய்!

ஆல்பர்ட்டாவில் கடந்த 15ஆம் திகதி, கார் விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு உதவ, மருத்துவ உதவிக்குழுவினரான Jayme Ericksonக்கு அழைப்பு வந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மகளுக்கு தெரியாமலே சிகிச்சையளித்த தாய்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கார் விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு அவர் தனது மகள் என தெரியாமலே வைத்தியரான தாய்  சிகிச்சையளித்த  சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

ஆல்பர்ட்டாவில் கடந்த 15ஆம் திகதி, கார் விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு உதவ, மருத்துவ உதவிக்குழுவினரான Jayme Ericksonக்கு அழைப்பு வந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதல் ஆளாக ஓடோடிச் சென்ற Jaymeம், நண்பரும் சக மருத்துவ உதவிக்குழுவினருமான Richard Reedம் இணைந்து, விபத்தில் சிக்கி அடையாளம் தெரியாமல் சிதைந்துபோன இளம்பெண் ஒருவருக்கு 20 நிமிடங்களுக்கும் அதிகமாக சிகிச்சையளித்துள்ளார்கள். 

பின்னர் அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சையளித்துவிட்டு Jayme வீடு திரும்ப, சிறிது நேரத்தில் பொலிஸார் அவரைத் தேடிவந்துள்ளார்கள்.

அவர்கள் கூறிய செய்தியைக் கேட்ட Jayme, அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவர் சற்று முன் சிகிச்சையளித்துவிட்டு வந்த இளம்பெண் வேறு யாரும் இல்லை, Jaymeஉடைய மகளான Montana Dobry (17) தான். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பெற்ற தாய்க்கே அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்துபோயிருக்கிறது Montanaவுக்கு! பின்னர், காயங்கள் காரணமாக Montana உயிரிழந்துவிட்டார்.

தங்கள் மகளுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதென முடிவு செய்துள்ளார்கள் Jaymeஉடைய குடும்பத்தினர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT