தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு

அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று கொழும்பில் சந்திப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த கூட்டம் கடந்த 15ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அன்றைய தினம் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர்,  இன்றைய தினம் சந்திக்க தீர்மானித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT