சந்திரிக்கா உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.

சந்திரிக்கா உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதும், கட்சியை விட்டுச் சென்று அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொண்ட சகலரினதும் கட்சி உறுப்புரிமைகளை நீக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொது செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளராக திலங்க சுமத்திபாலவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லசந்த அழகியவண்ண நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பொருளாளருக்கான வெற்றிடத்துக்கு சாரதி துஸ்மந்தவை நியமிக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT