ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

 ஈ.குஷான் கைது

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமானுக்கு பணிப் பெண்களாக செல்வோரிடம் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, பாலியல் ரீதியாக அச்சுறுத்தியமை, ஆட்கடத்தல், இலங்கை பணிப்பெண்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஈ.குஷான் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஈ.குஷானிடம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்வதாக பொலிஸார் கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT