இலங்கை போக்குவரத்துசபை விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் போதுமான அளவில் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் பாதிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று வழமையான கால அட்டவணையின் கீழ் ரயில்கள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
