தனியார் வங்கியில் பணிபுரிந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.

தனியார் வங்கியில் பணிபுரிந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த இளம் பெண், மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய ராஜபக்ச ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த யுவதி நேற்று (25) காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த யுவதி தொடர்பில் அவரது தாய் தெரிவிக்கையில், “நேற்று முன்தினம் (24) காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் நிகழ்வு ஒன்றிற்கு சென்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு மாடிக்குச் சென்ற நிலையில், அதிகாலை மூன்று மணியளவில் என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன்.

அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்து தனக்கு சோர்வாக இருப்பதாக கூறியதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என்றார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT